உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக கூட்டணிகள் தவிர தவெக, நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவிய நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணியால் தற்போது 5 முனைப்போட்டி நிலவுகிறது.

இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையொட்டி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை சென்னையில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலையில் அவர் சோளிங்கர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சி வேட்பாளர் அசன் மவுலான உள்ளிட்டோருக்காக வாக்கு சேகரித்தார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்படுவதால், இன்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

அதன் பின்னர், அமலுக்கு வர உள்ள தேர்தல் விதிமுறைகள் குறித்த பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.