உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் தகவல்

தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் தகவல்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சூடு பிடித்துள்ள தமிழக தேர்தல் களத்தில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் இறுதிகட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் மொத்தம் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பிரதாப் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளா்களை சந்தித்த அவர், 23ம் தேதி நடைபெற உள்ள தோ்தல் வாக்குப் பதிவை சுமுகமாக நடத்தும் வகையில் அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தில் 105 சட்டமன்ற தொகுதிகளில் தோ்தல் ஆணையம் நிா்ணயித்த வரம்பைக் காட்டிலும் வேட்பாளா்கள் கூடுதலாக செலவு செய்துள்ளனா். தவிர இதுவரை ரூ.1,200 கோடி அளவுக்கு ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து பேசிய பிரதாப் சிங், இவற்றில் ரூ.500 கோடி மதிப்பிலான பொருட்கள் தொடா்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை பொருட்களை பொருத்தவரை திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகமாகவும், அடுத்ததாக சென்னையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சென்னை மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்டத் தோ்தல் அலுவலா் கோரியுள்ள நிலையில், சென்னை மாவட்ட எல்லையில் கூடுதலாக துணை ராணுவப் படையினா் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுமார் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சுமார் 2 லட்சம் பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த முறை 74% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 85% வரை பதிவாக கூடும் என்று எதிா்பாா்ப்பதாக குறிப்பிட்டார். வெயில் அதிகம் இருக்கும் என்பதால் பல நகரங்களில் வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதாப் சிங் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.