உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தேர்தலையொட்டி சிறப்பு பேருந்து உள்பட 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

தேர்தலையொட்டி சிறப்பு பேருந்து உள்பட 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், வாக்களிக்கும் ஜனநாயக கடமையாற்ற சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள், நகரங்களில் பணிபுரிபவர்கள் பெருமளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அனைத்து பயணிகளுக்கும் அரசு பேருந்துகளில் இருக்கை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதால் பலர் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், தனியார் ஆம்னி பேருந்துகளில் சாதாரண நாட்களில் இருப்பதைக் காட்டிலும், தற்போது கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (ஏப்.21) முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்பட 10,663 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் இன்று 1,404 சிறப்புப் பேருந்துகளும், நாளை 3,570 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுநாள் 600 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 1,505 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதால், வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்வோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.3,567, தூத்துக்குடிக்கு ரூ.3,099, திருநெல்வேலிக்கு ரூ.3,899, நாகர்கோவிலுக்கு ரூ.3,600, கோவைக்கு ரூ.2,799 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

© NewsTimeTN. All Rights Reserved.