உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

விஜய், சங்கீதா விவாகரத்து குறித்து முதல் முறையாக எஸ்.ஏ.சி விளக்கம்

விஜய், சங்கீதா விவாகரத்து குறித்து முதல் முறையாக எஸ்.ஏ.சி விளக்கம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தவெக தலைவரும் தமிழ் திரையுலகின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தான் பிசியாக இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என்றும், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கும்படியும் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சங்கீதாவும் நேரில் வராமல் காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.

விஜய், சங்கீதாவின் இந்த மனுக்கள் நேற்றைய விசாரணையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு இரு தரப்பிலும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும், விஜய் – சங்கீதா இருவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகாததால் விவாகரத்து வழக்கு ஒத்திக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு குடும்பநல நீதிபதி சசிகலா, இந்த வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தான் நீதிமன்றத்திற்கு வந்தால் கூட்டம் கூடிவிடும் என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், ஜூன் 15ம் தேதி காணொலி காட்சி மூலமே விஜய் ஆஜராகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தனக்கு ரூ.250 கோடி ஜீவனாம்சம், பிள்ளைகளுக்கு தனியாக பணம் கொடுக்கும்படி வக்கீல்கள் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சங்கீதா கேட்டதாகவும், அதற்கு பிள்ளைகள் என் பொறுப்பு. ரூ.250 கோடிக்கு பதிலாக ரூ. 35 கோடி ஜீவனாசம் தருவதாக விஜய் தரப்பில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் – சங்கீதா விவாகரத்து குறித்து விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “விஜய் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்திற்கு எதிரானவர், பெற்றோருக்கு எதிரானவர் என அவரின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை சிலர் செய்து வருகின்றனர். அது அவர்களுக்கு கைவந்த கலை. அது தான் பெர்சனல் அட்டாக் என மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், எப்போதோ நடந்து, எப்போதோ இருவருக்குள்ளும் சமரசமாகி கையெழுத்தான விவகாரத்தை இப்போது கொண்டு வரச் செய்துள்ளனர். மற்றவர்களின் குணாதிசயங்களை சிதைக்கும் வேலையை செய்வதில் அவர்கள் பிஎச்டி முடித்தவர்கள். முடிந்த ஒரு விவகாரம் வெளியே வருகிறது என்றால், அதுவும் இந்த நேரத்தில் வெளியாகிறது என்றால் அதற்கு எதிர்கட்சிகளை தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும் எனவும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.