உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 சரிவு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 சரிவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

அண்மைக் காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒன்று அல்லது 2 நாட்கள் விலை குறைவதும் மறுநாள் இரட்டிப்பாக விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஏப்.22ல் சவரனுக்கு ரூ.400, ஏப்.23 ரூ.780, ஏப்.24 ரூ.480 என ரூ.1,660 குறைந்து விற்பனையான நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. ஞாயிறு சந்தை விடுமுறை என்பதால் எந்த மாற்றமும் இல்லை.

வாரத்தின் தொடக்க நாளான நேற்று, 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 குறைந்து கிராம் ரூ.14,100க்கு விற்பனையாகிறது.

அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, கிராம் வெள்ளி ரூ.265க்கும், கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற, இறக்கம் அதன் நிலையற்றத்தன்மை தங்கத்தில் முதலீடு செய்பவர்களை மட்டுமின்றி, நகை வாங்கும் தேவையில் உள்ள நடுத்தர மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.