தவெக தலைவரும் தமிழ் திரையுலகின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
அப்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தான் பிசியாக இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என்றும், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கும்படியும் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சங்கீதாவும் நேரில் வராமல் காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.
இருவரின் மனுக்களும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதையடுத்து, செங்கல்பட்டு குடும்பநல நீதிபதி சசிகலா, இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி அளித்தார். இதற்கு இரு தரப்பிலும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், விஜய் – சங்கீதா இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சசிகலா உத்தரவிட்டார்.
இதனிடையே, தனக்கு ரூ.250 கோடி ஜீவனாம்சம், பிள்ளைகளுக்கு தனியாக பணம் கொடுக்கும்படி வக்கீல்கள் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சங்கீதா கேட்டாராம். அதற்கு பிள்ளைகள் என் பொறுப்பு. ஆனால் ரூ. 250 கோடிக்கு பதிலாக ரூ. 35 கோடி ஜீவனாசம் தருவதாக விஜய் தரப்பில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா மாற்றம் செய்யப்பட்டுளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி எழிலரசி விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
விஜய், சங்கீதார இருவருமே நேரில் வரமுடியவில்லை என்றும் வீடியோ காலில் ஆஜராகவும் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, நீதிபதி எழிலரசி உடனே வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜராவதற்கு அனுமதி கொடுத்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


