பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 1000 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று 1000 புள்ளிகள் சரிந்து கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்திருப்பது, இதனால் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிரடியாக உயர்ந்திருப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை இந்திய பங்குச்சந்தைகளிலிருந்து வெளியே எடுத்து […]
தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ’வெப்ப தாக்குதல்’ (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு வார்டு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. […]
மே.வங்க 2ம் கட்ட தேர்தலில் 93% வாக்குப்பதிவு – மத்திய படைகள் பாஜகவுக்கு உதவுவதாக மம்தா சாடல்

மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடந்தது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு 2 கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதே நேரம், […]
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்

தவெக தலைவரும் தமிழ் திரையுலகின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அப்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தான் பிசியாக இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என்றும், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கும்படியும் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அமர்க்களமான வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 41வது லீக் போட்டி மும்பை வான்கடே திடலில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக வில் ஜாக்ஸ், ரையான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த இணை பவர்பிளேவில் வீசப்பட்ட 6 ஓவர்களில் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்தது. அதன் பின், நிதிஷ்குமார் ரெட்டி வீசிய 8வது […]
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு : தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78% மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும், மே.வங்க 2ம் கட்ட தேர்தல் முடிவடைந்த சிறிது […]