உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்தது. வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட உள்ளது.

மே.வங்க 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலனாவை தமிழகத்தில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக வேட்பாளர்கள் பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, கே.ஆர்.பெரியகருப்பன், சு.முத்துசாமி, சி.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், செந்தில்பாலாஜி, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், டி.ஜெ.கோவிந்தராஜன், சபா.ராஜேந்திரன், நாமக்கல் ராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ்.மூர்த்தி, ரெ.மகேஷ், ஆ.தமிழரசி, எஸ்.ஏ.சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர்.சிவா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். வரும் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் கள நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எந்தவித குளறுபடியும் நடந்து விடக் கூடாது. நம்முடைய பார்வையில் இருந்து எந்த ஒரு விஷயமும் தவறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.