இரவில் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வரும் 4ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தற்போதே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ’வெப்ப தாக்குதல்’ (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு வார்டு அமைக்கவும் […]
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் புதிய தொழில்நுட்ப சோதனை அலர்ட்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, இந்தியாவில் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘செல்பேசி ஒலிபரப்பு எச்சரிக்கை’ (செல் பிராட்காஸ்ட் அலர்ட்) என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு செல்பேசி ஒலிபரப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது எஸ்எம்எஸ் போலன்றி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் உடனடி எச்சரிக்கைகளை வினாடிகளில் அனுப்ப அனுமதிக்கிறது. நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை […]
மே.வங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது மறு வாக்குப்பதிவு

மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் நாளை மறுநாள் (மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்.29ம் தேதி நடந்த 2ம் கட்டத் தேர்தலில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டயமண்ட் ஹார்பரின் பல்தா பகுதியில் 4, மக்ரஹத் பாஸ்கிம் தொகுதியில் 11 இடங்களில், பாஜக வாக்காளர்கள் வாக்களிக்கத் தடுத்ததாக வந்த புகார்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அண்மைக் காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை […]
ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானுக்கு எதிரான டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடியது. இதன் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (6 ரன்), வைபவ் சூர்யவன்ஷி (4 ரன்) முதல் இரு ஓவர்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் களமிறங்கிய துருவ் ஜுரெல், கேப்டன் ரியான் பராக் இணை சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்களை […]
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

வர்த்தக சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த மாத தொடக்கத்தில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி, வர்த்தக சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக ரூ.990 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 990 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து […]
வர்த்தக சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.990 உயர்வு – உணவு பொருள் விலை உயரும் அபாயம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் ஆகியவை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் […]
பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை அருகிலுள்ள அழகர்மலையில் அருள்பாலிக்கும் சுந்தரராஜ பெருமாள், பக்தர்களால் அன்புடன் கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் மதுரைக்கு எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் தருணம் சித்திரை திருவிழாவின் வைபவத்தின் உச்சகட்ட நிகழ்வாகும். இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவில் […]
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சமாக ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஏப்ரல் 2026ல் ரூ. 2.43 லட்சம் கோடியைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது கடந்தாண்டு இதே கால கட்டத்திலான வசூலை விட சுமார் 9% அதிகமாகும். உலகளவில் பொருளாதார சவால்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் நீடித்தாலும், இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையாக இருப்பதை இந்த வளர்ச்சி காட்டுகிறது. குறிப்பாக, மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்குவதால் உள்நாட்டு வரி வசூல் ரூ. 1.85 லட்சம் […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அண்மைக் காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை […]