உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்த அணியில், நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில், இந்தியா தனது முதல் போட்டியில் ஜூன் 14ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியில், ஷபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பார்தி புல்மாலி, ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் பேட்ஸ்வுமன் மற்றும் ஆல் ரவுண்டர்களாவும் ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா விக்கெட் கீப்பர்களாகவும், ரேணுகா சிங் தாக்கூர், நந்தினி ஷர்மா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஸ்ரீ சரணி, கிராந்தி கௌட் வேகப்பந்து மற்றும் பந்துவீச்சாளர்களாகவும் இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் பிரீமியர் லீக் 2026ல் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்த பார்தி புல்மாலி மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நந்தினி சர்மா ஆகியோர் புதிதாக அணியில் இடம் பிடித்துள்ளனர்.

காயம் காரணமாக அமன்ஜோத் கவுர் இந்தத் தொடரில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பார்தி புல்மாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை அணியில் மாற்று வீரர்கள் (ஸ்டேண்ட்பை) யாரும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தொடருக்கு முன்னதாக, இந்திய அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.