கேரளாவில் 96 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

கேரளாவில் அங்குள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்.9ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணி நேரடி போட்டியில் இருக்கிறது. மற்றொரு புறம் பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சியை பிடிக்க தீவிரமாக […]
தட்டாஞ்சாவடி தொகுதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெற்றி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 89.87% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியும், காங்கிரஸ், திமுக கூட்டணியும், தவெக தனித்தும் களம் கண்டன. இதில், என்டிஏ மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இடையே நேரடி இருமுனை போட்டி நிலவியது. புதுச்சேரியில் […]
சீமான், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பின்னடைவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி முடிவடைந்து, அதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மையங்களுக்குள் செல்வதற்கு முதன்முறையாக ‘க்யூஆர் குறியீடு’ கொண்ட புகைப்பட […]
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு – நீலாங்கரையில் போலீஸ் குவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்த மே.வங்கம், அசாம், கேரளாவிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனைப் போட்டி நிலவிய […]
தொடங்கியது இவிஎம் மூலம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடந்தது. இதில் முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மமக, ஐயூஎம்எல், கொமதேக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் […]
தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலை

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போது வரை வெளியான 50 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரப்படி திமுக கூட்டணி 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தவெக 17 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 16 தொகுதிகளிலும் முன்னிலைப் பெற்றுள்ளன. இதில் ஆர்.கே. நகர், கொளத்தூர், பெரம்பூர், […]
இன்று மே.வங்கம், அசாம், கேரளாவிலும் வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்த மே.வங்கம், அசாம், கேரளாவிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலத்திலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மே.வங்க மாநிலத்தில் 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக கடந்த ஏப்.23 […]
தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக கூட்டணி 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் தவெக 2 தொகுதிகளிலும் முன்னிலைப் பெற்றுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் […]
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தொடங்கியது தபால் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மமக, ஐயூஎம்எல், கொமதேக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் 20க்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புகள் அடங்கிய […]
ஜன நாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டு கைதான 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜன நாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.9ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின், ஜன நாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் […]