உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவிப்பு

16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவிப்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடந்து முடிந்த தேர்தலில், தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய திராவிட கட்சிகளை தனது 2 வருட அரசியல் வருகையால் திணறடித்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும், தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவெக தரப்பில் இருந்து திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவளித்துள்ளது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டு கால திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே, தவெக தலைவர் விஜய் நாளை (மே 7) சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து சென்னை திரும்பிய பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதைத் தொடர்ந்து, 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார். மே 5ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கலைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில், சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.