உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மு.க.ஸ்டாலினுடன் திருமா, சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு

தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரியுள்ள நிலையில், திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனிடையே, திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக உடனான கூட்டணியை முறித்து […]

இடதுசாரிகள் முடிவை பொறுத்து விசிக முடிவு – திருமா

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அக்கட்சிஆட்சியமைப்பதற்கு தேவையான அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, வெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி […]

ஆளுநரின் நடத்தை அரசமைப்புக்கு முரணானது – நடிகர் பிரகாஷ்ராஜ்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அறுதி பெரும்பான்மையை எட்டாததால் தொங்கு சட்டசபையே அமையும் சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு தவெக ஆதரவுகோரியிருக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டும் நிபந்தனையுடன் கூடிய ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் முதல்வராக பதவியேற்க ஆளுநரை சந்தித்து விஜய் உரிமை கோரியுள்ள நிலையில், அவர் விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி […]

தவெக பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தர வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட்

தனிப்பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை. எனினும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 உறுப்பினர்களை வழங்கி, […]

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்; ராஜ் பவன் அல்ல – கமல்ஹாசன்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாறு காணாத மும்முனை போட்டியை கண்டது. கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் முதல் தேர்தலை சந்தித்த தவெக 34.92% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது கடந்த 1967க்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, விஜய் நேற்று நேரில் […]

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் விஜய் வசந்த்?

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து அதற்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் பரப்புரையின் போதும் காங்கிரஸ் மூத்த தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மேடையேறவில்லை. தமிழகத்துக்கு இரண்டு முறை வந்தும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான போதிய ஆதரவு இல்லாத தவெகவுக்கு […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு வருந்திய இபிஎஸ்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் மாநில அரசியல் களம் எதிர்பார்த்ததை விட மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சியமைக்க தேவையான 6 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல் தவெக திணறுகிறது. இந்த சூழலில் புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அதிமுக, திமுக கட்சிகள் என சேர்த்து பதில் கூற முற்படும் போது […]

தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் பேட்டி

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக […]

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும், தொடக்கம் முதல் பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால், 3.2 ஓவரில் சன்சைர்ஸ் அணி 50 […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]

© NewsTimeTN. All Rights Reserved.