உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் பேட்டி

தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் பேட்டி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று ஆளுநரை சந்தித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் பதவியேற்பு தள்ளிப்போகிறது.

இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர். விஜயை கைகுலுக்கி சால்வை அணிவித்து வரவேற்ற ஆளுநர், நினைவுப் பரிசும் வழங்கினார்.

விஜயின் கடிதத்தை ஏற்று ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடிதத்தில் 112 எம்எல்ஏக்களின் விவரம் மட்டுமே இருந்ததால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து 2வது முறையாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விஜயின் சட்ட வல்லுநர்கள் குழு ஆளுநரை 2வது முறையாக சந்தித்து விளக்கம் கொடுத்தது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்காததால் விஜயின் பதவியேற்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை திமுக ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றிப் பார்க்கும். ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும்.

பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம். திமுகவைப் போல மாதம் 1,000 ரூபாயாவது கொடுக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தரும் விஜய்யின் வாக்குறுதி சந்தேகத்துக்குரியது. அதைச் செய்தால் மகிழ்ச்சி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.