உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தவெக உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு – காங். நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

தவெக உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு – காங். நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய திராவிட கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும், தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவெக தரப்பில் இருந்து திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவளித்துள்ளது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டு கால திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்தே தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.

அதே வேளை, காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவுக்கு கட்சி நிர்வாகிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவதால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் அமைப்பில் இருந்து பிரனேஷ் பாலாஜி, காங்கிரஸ் கட்சியின் மாணவரணி மாநில செயலாளர் பதவியில் இருந்து தயானந்த் கார்த்திக் அடுத்தடுத்து விலகியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து மேலும் பல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.