உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். கார்த்திக் தியாகி வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து விளையாடிய நிதிஷ் ராணா (8 ரன்), சமீர் ரிஸ்வி (3 ரன்), 8வது மற்றும் 10வது ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தனர். அதுவரை நிலைத்து ஆடி ரன் குவித்த தொடக்க வீரர் பதும் நிசாங்கா, அனுகுல் ராய் வீசிய 11வது ஓவரில் (29 பந்து, 3 சிக்சர், 5 பவுண்டரி, 50 ரன்) அவுட்டானார்.

அதே ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழக்க, டெல்லி அணி செய்வதறியாமல் திணறியது. கடைசி கட்டத்தில் சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், 20 ஓவர் முடிவில் டெல்லி, 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கொல்கத்தா தரப்பில் அனுகுல் ராய், கார்த்திக் தியாகி தலா 2, வைபவ் அரோரா, சுனில் நரைன், கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக விளையாடிய 47 பந்துகளில் 5 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 100 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 27 பந்துகளில் 2 சிக்சருடன் 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 14.2 ஓவரில் 147 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட் எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.