தவெகவுக்கு ஆதரவா? – இன்று மாலை விசிக அறிவிப்பு

தவெக விற்கு ஆதரவா? இல்லையா? என்று இன்று மாலை விசிக நிலைப்பாட்டை அறிவிக்கும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாமல் திணறி வருகிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள […]
கடற்படை புதிய தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்

இந்தியக் கடற்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கமாண்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவர், வரும் 31ம் தேதி முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி மே 30ம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2028 வரை நீடிக்கும் […]
புதிய தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்

நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய […]
`ஜெயிலர் 2′ முதல் சிங்கிள் அப்டேட்?

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் `ஜெயிலர் 2′ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. ‘ஜெயிலர் 2’ கடந்த 2023ல் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் ரஜினிகாந்த், எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து […]
மே.வங்க முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி

மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதியும், 2ம் கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்.29ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 207 தொகுதிகளில் பாஜக, 80 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், சட்டப்பேரவையை […]
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே டெல்லியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். கார்த்திக் தியாகி வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விளையாடிய நிதிஷ் ராணா (8 ரன்), சமீர் ரிஸ்வி (3 ரன்), […]