உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

`ஜெயிலர் 2′ முதல் சிங்கிள் அப்டேட்?

`ஜெயிலர் 2′ முதல் சிங்கிள் அப்டேட்?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் `ஜெயிலர் 2′ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடைபெற்று வருகிறது.

‘ஜெயிலர் 2’ கடந்த 2023ல் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் ரஜினிகாந்த், எஸ். ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகிவரும் இப்படத்தில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமாக படமாக்கப்பட்ட நிலையில், ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு முடிந்தது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 21ம் தேதியோடு நிறைவடைந்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். ஜூன் மாதம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதுவே தற்போதைய ஜெயிலர் 2 அப்டேட் ஆக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜெயிலர் முதல் பாகத்திலிருந்து முதல் சிங்கிளாக வெளியான `காவாலா’ மிகப் பெரிய ஹிட் அடித்தது. ஏறக்குறைய அந்தப் படத்துக்கான முகவரியாகவே மாறியது. அது போல இந்தப் பாடலும் பெரிய ஹிட்டை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

ஜெயிலர் 2க்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியா அல்லது அஷ்வத் மாரிமுத்துவா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.