உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழகத்தின் 13வது முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பு

தமிழகத்தின் 13வது முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தின் 13வது முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்பட்டது.

இதையடுத்து தவெக தரப்பில் காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூ. கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக உயர்ந்தது. தொடர்ந்து தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.

இதன்மூலம், தமிழகத்தில் 59 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி நடத்தி வந்த நிலையில், 3ஆவது கட்சியாக தவெக ஆட்சியமைக்க உள்ளது.

விஜயுடன் தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், அருண் ராஜ், நிர்மல் குமார், ராஜ் மோகன், வெங்கடரமன், கீர்த்தனா, டி.கே பிரபு உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

விஜயின் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை உடையவர்களுக்கு மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளனர்.

இதனையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றி ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டம் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.