உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழக முதல்வராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்

தமிழக முதல்வராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தின் 13வது முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்க பணிகளில் ஈடுபட செய்து, 2021ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட செய்து 115 இடங்களில் தவெக வென்றது.

கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தனக்கிருந்த ரசிகர்கள் கூட்டத்தை வாக்குகளாக மாற்றி, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார்.

ஆளுநர் விழா மேடைக்கு வந்த பிறகு, தவெக தலைவர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவி பிரமாணத்தின் போது தவெக தலைவர் விஜய், சி.ஜோசப் விஜய் என்னும் நான் எனக் கூறி பதவியேற்ற போது நேரு உள்விளையாட்டரங்கமே அதிர்ந்தது.

விஜயுடன் தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், அருண் ராஜ், நிர்மல் குமார், ராஜ் மோகன், வெங்கட்ராமன், கீர்த்தனா, டி.கே பிரபு உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அதைத் தொடர்ந்து, கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், அருண் ராஜ், நிர்மல் குமார், ராஜ் மோகன், வெங்கட்ராமன், கீர்த்தனா, டி.கே பிரபு உள்ளிட்ட 9 பேருக்கும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முன்னதாக, வந்தே மாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்களைப் பெண்கள் குழுவினர் பாடினர்.

விஜயின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, விழா மேடையில் தவெக தலைவர் விஜய் அருகே அமர்ந்திருந்தார். விஜய் முதல்வராக பதவியேற்றதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு முடிந்தவுடன் மீண்டும் வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் பிறகு, முதல்வர் விஜய், 9 அமைச்சர்கள் மற்றும் ராகுல் காந்தி ஆளுநருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விஜய் முதல்வராக பதவியேற்றதும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றி குவிந்திருந்த ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகமாக விசிலடித்து கொண்டாடினர்.

தவெகவுக்கு காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும், ஐயூஎம்எல் கட்சியும் ஆதரவளித்தைத் தொடர்ந்து, தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக உயர்ந்தது. இதையடுத்து, விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.