உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறி, முதல் கட்சியாக தவெகவுக்கு ஆதரவளித்தது.

இதனைத் தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎல்எல் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்று ஆட்சி அமைக்க தேவையான 118க்கும் கூடுதலாக 120 எம்எல்ஏக்களை பெற்றது.

இதையடுத்து தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏவாகியுள்ள முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், திமுக சட்டப்பேரவை கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தேர்வாகியுள்ளார். திமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.