உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்பு

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.

இதையடுத்து விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அவருக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தொடர்ந்து, நேற்று மாலை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில், முதல்வர் விஜய் முதல் நபராக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பெண் அமைச்சர் கீர்த்தனா வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வராததால் பதவியேற்கவில்லை.

முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, அகர வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப்பட, சட்டப்பேரவையின் தலைமை செயலர் சீனிவாசன் முன்பு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னாள் முதல்வர்களான இபிஎஸ், ஓபிஎஸ், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், பாமகவின் சௌமியா அன்புமணி, திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என். நேரு உள்ளிட்டோரும் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று வருகின்றனர். ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்றும், ‘கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்’ என்றும் இரண்டு வாசகங்களில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படிக் கூறி பதவியேற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.