உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

’சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ – தமிழக அரசு அரசாணை

’சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ – தமிழக அரசு அரசாணை

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு அரசு 17வது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வரான விஜய் விழா மேடையிலேயே, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தவெகவின் தேர்தல் அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தான், முதல்வராக பொறுப்பேற்ற விஜய் முதலில் கையெழுத்திட்ட கோப்புகளில் இந்தத் திட்டமும் இருந்த நிலையில், அந்தத் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில், ஐஜி தலைமையில் 1 எஸ்.பி, 2 டி.எஸ்.பி மற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள்.

குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்காணித்து பாதுகாப்பான சூழலை உருவாக்க திட்டம்; பேருந்து நிறுத்தம், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்களில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலும், சமூகநலத்துறை, கல்வித் துறையுடன் ஒருங்கிணைந்து பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பாதிக்கப்பட்டவா்களின் புகாா்கள் மீதும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவா்களை மீட்டு அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், இதர உதவிகளும் உரிய நேரத்தில் கிடைக்க வழி வகை செய்யப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.