உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் போட்டியின்றி தேர்வு?

சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் போட்டியின்றி தேர்வு?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், தவெக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இவர் அதிமுகவில் நீண்டகாலமாக இருந்தவர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர்.

தவெக தலைவர் விஜய் இவரது அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிர், இவர் எம்எல்ஏவாக பதவியேற்ற போது எழுந்து நின்று கைகூப்பி மரியாதை அளித்தார்.

இவர் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக, கடந்த 2011ல் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் அன்பழகன் கே. என்பவரை விட 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

சபாநாயகர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியியின்றி தேர்வாகிறார். துணை சபாநாயகராக திருச்சி துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.