தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி வழக்கப்பட்டிருப்பதற்கு தவெக கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய்யின், ஆஸ்தான ஜோதிடராக இருக்கும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் சிறப்பு அதிகாரிக்கான பணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதல்வரின் அரசியல் சிறப்பு பணி அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி ஏதாவது விளக்கமளிக்க முடியுமா என்று காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜோதிடருக்கு அரசு பதவி ஏன் வழங்கப்பட்டது என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு உரிய விளக்கம் அளிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், “எனக்கு புரியவில்லை. ஜோதிடருக்கு ஏன் சிறப்புப் பணி அதிகாரி (ஓஎஸ்டி) பதவி தேவைப்பட வேண்டும்? யாராவது விளக்க முடியுமா?” என்று வினவியுள்ளார்.


