சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் -எஸ்.பி.வேலுமணி

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்கட்சி அந்தஸ்த்தையும் இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே 10 தோல்விகளை சந்தித்த நிலையில், தற்போதைய தோல்வியும் சேர்ந்து 11வது முறையாக அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்ததால், அவர்கள் இபிஎஸ்ஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனிடையே, தவெக தலைவர் […]
கரூர் வழக்கு விசாரணை அதிகாரி ஐ.ஜி. அஸ்ரா கார்க் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

முதல்வராக விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கை, தற்போது உளவுத் துறை ஐஜியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இது தொடர்பான வழக்கை முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், […]
ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டுள்ள விஜய்யின், அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் நேற்று உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் சிறப்பு அதிகாரிக்கான பணி குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதலமைச்சரின் சிறப்பு பிரிவு அதிகரியாக நியமித்து அரசு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு அந்த நியமனத்தை ரத்து செய்துள்ளது. […]
தவெக ஆட்சி தொடர திமுக தடையாக இருக்காது – மு.க.ஸ்டாலின்

தவெக ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், […]
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி

தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று வரை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கெடு விதித்திருந்தார். அதன்படி, தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். காங்கிரஸ் வழிமொழிந்தது. ஆரம்பத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல், மன்னார்குடி எம்எல்ஏ கமாராஜ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். […]
மகளிர் உரிமை தொகைக்காக காத்திருப்பு – உதயநிதி பேச்சு

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், கடந்த 2 நாட்களும் சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களும், சட்டப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவியேற்றனர். தொடர்ந்து இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரிசையாக எழுந்து தங்களது ஆதரவு, எதிர்ப்பை கூறி கருத்தை பதிவு செய்தனர். இதன்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், புதிய […]
விஜய் வீட்டிற்கு முகத்தை மூடி கொண்டு சென்றது யார்? – பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் விளாசல்

தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று வரை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கெடு விதித்திருந்தார். அதன்படி, தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். காங்கிரஸ் வழிமொழிந்தது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர். பேரவையில் இந்த தீர்மானம் மீது […]
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் விஜய் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த ஆறு மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வின்மீது தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சார்ந்த திருவாளர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் […]
தங்கம் சவரன் ரூ.8,560: வெள்ளி கிலோ ரூ.30,000 உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15% ஆக உயர்வு

ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்கவும், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்திய நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசு 6%லிருந்து 15% ஆக உயர்த்தியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோராகவும், மிகப்பெரிய வெள்ளி நுகர்வோராகவும் விளங்கும் இந்தியா, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை பெருமளவில் சார்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள காலகட்டத்தில், […]