உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

கரூர் வழக்கு விசாரணை அதிகாரி ஐ.ஜி. அஸ்ரா கார்க் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

கரூர் வழக்கு விசாரணை அதிகாரி ஐ.ஜி. அஸ்ரா கார்க் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முதல்வராக விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கை, தற்போது உளவுத் துறை ஐஜியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இது தொடர்பான வழக்கை முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி.யான ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய், ஜன.12, ஜன.19 மற்றும் மார்ச் 15 என 3 முறை டெல்லி சிபிஐ அலுவலகத்திற்குச் சென்று வந்தார். தற்போது இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது.

இதனிடையே, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடைபெற்று, அதில் தவெக 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்து, முதல்வராக விஜய் பதவி ஏற்றார்.

இந்நிலையில், கரூர் விவகாரத்தில் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த ஐபிஎஸ் அஸ்ரா கார்க்கை, தற்போது தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐஜியாக தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.