உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி – டைட்டன்ஸ் அபார வெற்றி

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி – டைட்டன்ஸ் அபார வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் கில் களமிறங்கினர். கில் 5 ரன்னிலும், அடுத்த வந்த பல்டர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து 22 ரன்னில் பெவிலியன் திரும்பியதால் 9.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்து குஜராத் அணி திணறியது. இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சதர்சனுடன் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினார்.

சாய் சுதர்சன் 61 ரன் (44 பந்து, 5 பவுண்டர், 2 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன் (33 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் 11 ரன், திவாட்டியா 4 ரன் எடுக்க குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் பிரபுல் ஹிங்கே மற்றும் ஷகிப் ஹூசைன் தலா 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 169 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 19, சலீல் 16 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணி பந்து வீச்சில் ரபாடா, ஹோல்டர் தலா 3, பிரசித் 2, சிராஜ், ரஷீத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.