உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

லக்னோ அணிக்கு எதிரான போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

லக்னோ அணிக்கு எதிரான போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

இந்த சூழலில், நேற்றிரவு ஜெயிப்பூரில் நடந்த 64வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், ஜோஸ் இங்லிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் ராஜஸ்தான் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்லிஸ் 29 பந்துகளில், 7 பவுண்டரி, 3 சிக்சர் உடன் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்து வந்த நிக்லோஸ் பூரன் 16 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷுடன் ஜோடி சேர்ந்து ரன் வேட்டையில் ஈடுபட்டார். ரிஷப் பண்ட் 35 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் 57 பந்துகளில், 11 பவுண்டரி, 5 சிக்சர் உடன் 96 ரன்கள் எடுத்திருந்த போது, கடைசி பந்துக்கு முன் பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

கடைசியாக 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் புஞ்சா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 93 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 225 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது.

சென்னைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர் ஹென்ரிச் கிளாசன் 47 ரன் எடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்து மீண்டும் ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தி உள்ளார். இவர் 13 ஆட்டங்களில் 555 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் குஜராத் அணியின் சாய் சுதரன் 554 ரன்கள், 3வது இடத்தில் சுப்மன் கில் 552 ரன்கள் எடுத்துள்ளனர்.

19வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன. 4வது இடத்தை பிடிக்க பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா, டெல்லி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் பஞ்சாப், சென்னை, டெல்லி ஆகிய அணிகள் எஞ்சி உள்ள ஒரு போட்டியில் வென்றால் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதுவும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே 4வது இடத்துக்கு முன்னேறுவது எந்த அணி எனத் தெரியும்.

இருப்பினும், பிளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி மட்டுமே தகுதி பெற வேண்டும் என்பதால் ரன் ரேட் முக்கியமாக கணக்கிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.