உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

வாழ்நாள் முழுவதும் விஜய் ஹீரோவாக இருக்க வேண்டும் – இயக்குநர் மிஷ்கின்

வாழ்நாள் முழுவதும் விஜய் ஹீரோவாக இருக்க வேண்டும் – இயக்குநர் மிஷ்கின்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கடந்த 2023ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. இந்தப் படத்தில் விஜய் உடன் மிஷ்கின் இணைந்து நடித்திருந்தார். இவர் அதற்கு முன்பு 2002ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரிமளா அன்ட் கோ’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் யோகிபாபு, சான்டி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அறிமுக இசையமைப்பாளர் ஃபாக்ஸன் இசையமைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் கூறுகையில், தன்னுடைய தம்பி விஜய் என்று கட்சி தொடங்கினாரோ, அன்றே ‘இது ஒரு சுனாமியாக இருக்க போகிறது’ என்று தன்னுடைய உதவியாளர்களிடம் கூறியதாகவும், விஜய் ஒரு சீட்டு கூட வரமாட்டார் என பலரும் கூறிய போதும் தான் அமைதியாக இருந்ததாகவும் இன்று அவர் சாதித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், விஜய்க்கு மன உறுதி அதிகம். சினிமாவில் ஒரு கால்ஷீட்டுக்கு ஹீரோவாக இருந்தார். இனிமேல் வாழ்நாள் முழுவதும் அவர் ஹீரோவாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய் நல்லது செய்வார். அவருக்காக பிரார்த்திப்போம். விஜய் பிரச்சாரம் செய்யும்போது அவரை பற்றி பலர் தவறாக பேசியதாகவும், அவருடன் பழகியிருப்பதால் அவர் நல்ல மனிதர் என்று எனக்கு முன்பே தெரியும். தேர்தலுக்கு முன் இதை சொல்ல முடியாது. எந்த ஒரு உதவியையும் அவரிடம் கேட்க போவதில்லை. தூரத்திலிருந்து அவரை வாழ்த்துவேன். அவரை பார்ப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.