உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

குஜராத் அணியிடம் தோல்வி – ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே

குஜராத் அணியிடம் தோல்வி – ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்றிரவு அகமதாபாத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 84 ரன் (53 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்ஸ்), சுப்மன் கில் 64 ரன் (37 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்ஸ்) குவித்தனர். பட்லர் 27 பந்தில் 57 ரன்களுடன் (5 பவுண்டரி, 4 சிக்ஸ்) ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 229 ரன் குவித்தது.

இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே 13.4 ஓவரில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிஎஸ்கே தரப்பில் அதிகபட்சமாக தூபே 17 பந்தில் 47 ரன் (4 பவுண்டரி, 4 சிக்ஸ்) விளாசினார். சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.

சிறப்பாக பந்து வீசிய குஜராத்தின் முகமது சிராஜ், ரபாடா, ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே படுதோல்வியின் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

தொடர்ந்து 3வது முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடைசி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து ஐபிஎல் தொடரை விட்டு சிஎஸ்கே அணி வெளியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

© NewsTimeTN. All Rights Reserved.