உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

விசிக வன்னியரசு, ஐயூஎம்எல் ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்பு

விசிக வன்னியரசு, ஐயூஎம்எல் ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

அதைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்த சூழலில், தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

முன்னதாக, தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை எனவும் கூறியிருந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள், தவெக விருப்பத்தின் காரணமாக தாங்கள் அமைச்சரவையில் இணைவதாக இருகட்சிகளும் உறுதிபடுத்தியிருந்தன.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் விசிக திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னியரசு மற்றும் ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியரசு அமைச்சராக பதவியேற்றிருப்பதன் மூலம், தவெக அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.