உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தவெகவில் இணைந்தார் பதவி விலகிய அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா

தவெகவில் இணைந்தார் பதவி விலகிய அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

இன்று காலை தனது பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கிய அம்பசாமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, இபிஎஸ் அணி மற்றும் சிவிஎஸ் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சிவிஎஸ் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இதில் எஸ்பிவி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த அதிமுக எம்எல்ஏக்களில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தனர்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதிமுக ஏற்கனவே இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படும் நிலையில், எஸ்பிவி அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறுவது, அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக சட்டமன்ற செயலகம் இன்று அறிவித்தது.

இதனால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அம்பசாமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனின் அறிவுறுத்தலின்படி, அவர் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை அவரிடம் வழங்கினார்.

முன்னதாக, பிரிண்ட் செய்து கொடுத்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அவர் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை சபாநாயகரும் ஏற்றுக் கொண்டார்.

ஏற்கனவே 2 அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுகவில் எஸ்பிவி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் அதிமுகவின் நிலை என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.

நேற்று பதவியை ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்களும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இணைந்ததை குறிப்பிட்டு தலைமைச்செயலகமா அல்லது தவெக அலுவலகமா என்று திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், கடும் விமர்சனத்தை சற்றும் மதிக்காமல் கட்சி அலுவலகமாகவே தலைமைச் செயலகத்தை தவெக மாற்றியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

© NewsTimeTN. All Rights Reserved.