தமிழகத்தில் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் – வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் எனவும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. […]
மே.வங்கத்தில் ரூ.5க்கு மீன் சாப்பாடு – முதல்வர் சுவேந்து அறிவிப்பு

மக்களின் நலனுக்காக 400 தனித்துவ உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் 5 ரூபாய்க்கு மீன்சாதம் விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதல்வராக கடந்த 9ம் தேதி சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். அதன் தொடர்ச்சியாக அவர் இன்று பல்வேறு […]
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றடைந்தார் முதல்வர் விஜய்

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார். முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான பயண ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனித்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான […]
இஸ்லாமியப் பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தியாக திருநாளான பக்ரீத் திருநாளில் என்றென்றும் என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பக்ரீத் பண்டிகை வாழ்த்து செய்தியில், “ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை […]
ஜூன் மாதத்துக்கான 9.91 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்க தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை கூட்டம் அதன் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் முன்னிலையில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்றார். இதன் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த நீரை உடனடியாகப் பிலிகுண்டுலுவில் உறுதி செய்ய வேண்டும் […]
ரயில்களில் விற்கப்படும் உணவுகளின் விலை ஜூன் 1 முதல் உயர்வு – ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை ஜூன் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. சமையல் சிலிண்டர் விலை உயர்வு, மாவு, எண்ணெய் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த விலை மாற்றத்திற்கு மத்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கட்டணங்கள் ஜூன் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, சமோசா ஒன்றின் விலை ரூ.12லிருந்து ரூ.20 ஆகவும் வட பாவ் […]
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கேரள முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொச்சின் கனிமவள முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பினராயி விஜயன் மகள் டி.வீணாவிற்கு சொந்தமான இருப்பது “எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்” என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு 2018 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனம், எந்த சேவையும் பெறாமல் ரூ.1.72 கோடி தொகையை வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. […]
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 சரிவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]
குவாலிபயர் 1ல் குஜராத் படுதோல்வி : பைனலுக்கு முன்னேறியது ஆர்சிபி

ஐபிஎல் 19வது தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று குவாலிபயர் 1ல் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆர்சிபியின் ஓபனர்களாக விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 25 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 43 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 19 […]
நீட், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசவில்லை; மேலிருந்து ஆர்டர் வந்திருச்சா? – உதயநிதிக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைக்க கூட்டணி தர்மத்தை மீறி ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் இணைந்து செயல்படும் என கூட்டணியை உறுதிசெய்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர் தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸை உதயநிதி விமர்சித்திருந்த நிலையில், […]