உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றடைந்தார் முதல்வர் விஜய்

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றடைந்தார் முதல்வர் விஜய்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.

முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான பயண ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனித்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லி சென்றுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேகேதாட்டு விவகாரம், சென்னை மெட்ரோ திட்டம், பிஎம்ஸ்ரீ கல்வி நிதி உள்ளிட்ட தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய், பிரதமரிடம் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியையும், அதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்கிறார்.

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.