உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

கெயிலின் 14 ஆண்டு சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

கெயிலின் 14 ஆண்டு சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நியூ சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய 15 வயது இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால், வைபவ் 2013ம் ஆண்டில், 30 பந்துகளில் சதம் விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்கும் அரிய வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், அதிக சிக்சர்கள் அடித்த கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் விளாசிய சிக்சர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. இதனால், ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரராக இதுவரை திகழ்ந்து வந்த கிறிஸ் கெயிலின் 14 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்தார்.

கடந்த 2012ம் ஆண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடிய கிறிஸ் கெயில் 59 சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். 14 ஆண்டுக்கு பின் அந்த சாதனை வைபவால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், கிறிஸ் கெயில் 2ம் இடத்திலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆந்த்ரே ரஸல் (2019ம் ஆண்டு, 52 சிக்சர்) 3ம் இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.