உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சென்னை மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் அமைச்சர் வ. காந்திராஜ் ஆய்வு

சென்னை மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் அமைச்சர் வ. காந்திராஜ் ஆய்வு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் சென்னை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையால் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கறி கடைகள், கூட்டுறவு மருந்தகம், பொது விநியோகத் திட்ட அங்காடிகள் ஆகியவற்றில் பொருட்களின் தரம், விற்பனை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பூங்கா நகர் மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் கொடுங்கையூரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணியின் தரம் மற்றும் திட்ட மதிப்பீடு குறித்தும் அவர் ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து, பண்டக சாலையால் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட், பேக்கிங் கிட்டங்கி மற்றும் சங்கப் பணியாளர்களுடன் பணியாளர் நலன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியால் நடத்தப்படும் அண்ணா நகர் கிளையில் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் கிளையின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் வ. காந்திராஜ் சோதனை மேற்கொண்டார்.

பின்னர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் குளிர் பதன கிடங்கு குளிர்பானக் கடையின் உள்ளே அனைத்து தளங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள், பொருட்களை எடுத்துச் செல்லும் லிப்ட், கிடங்கின் மாதாந்திர வருவாய் விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.