உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று நீலகிரி, கோவை உட்பட 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு தமிழகம், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு- தென்கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், வட உள் தமிழக பகுதிகளில் நாளை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.