உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஜேசன் சஞ்சய் இயக்கிய `சிக்மா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜேசன் சஞ்சய் இயக்கிய `சிக்மா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஜேசன் சஞ்சய் இயக்கிய `சிக்மா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு உருவானது. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவான இப்படத்தில் அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோகி ஜாபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் ஜேசன் படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் படம் பற்றி கூறுகையில், சிக்மா தனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்ததாகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தனது கதையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஜூலை 31ம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.