உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஜூன் 11 முதல் 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா – 48 அணிகள், 104 போட்டிகள்

ஜூன் 11 முதல் 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா – 48 அணிகள், 104 போட்டிகள்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

ஜூன் 11 முதல் 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா – 48 அணிகள், 104 போட்டிகள்

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 23வது பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஜூன் 11ம் தேதி மெக்ஸிகோ சிட்டியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ‘எஸ்டாடியோ ஆஸ்டெகா’ மைதானத்தில் தொடக்க ஆட்டம் நடைபெறும். இதன் மூலம் 3 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் முதல் மைதானம் என்ற தனிச்சிறப்பை ஆஸ்டெகா பெறுகிறது.

உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல்முறையாக 48 நாடுகள் பங்கேற்பது இந்தத் தொடரின் மாபெரும் சிறப்பம்சமாகும். 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவிற்கு 4 அணிகள் வீதம் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தற்போதைய சாம்பியனான அர்ஜென்டினாவுடன் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரேசில் போன்ற முன்னணி அணிகள் இம்முறையும் கோப்பையை வெல்லும் போட்டியில் முன்னணியில் உள்ளன.

மொத்தம் 39 நாட்களில் 104 விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறவுள்ளன. அதிக நாடுகளுக்கு உலக மேடையில் வாய்ப்பளிக்கும் இந்த முடிவு, கால்பந்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும்.

வட அமெரிக்காவின் 16 நவீன நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவின் ‘லெவிஸ் ஸ்டேடியம்’, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் போன்ற முக்கிய நகரங்கள் இதில் அடங்கும்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இறுதிப் போட்டி, ஜூலை 19ம் தேதி நியூயார்க்-நியூஜெர்சியில் உள்ள ‘மெட்லைஃப்’ மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

© NewsTimeTN. All Rights Reserved.