நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தமிழக அரசியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவின் இந்த 13 தொடர் தோல்விகளுக்கு இபிஎஸ்ஸே காரணம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இபிஎஸ், சிவிஎஸ்-பிஎஸ்வி தரப்பு என கட்சி இரண்டாக பிளவுபட்டு நின்றதால் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்டு அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டது.
இந்த மோதல் காரணமாக, விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை சிவிஎஸ் தரப்பு கைப்பற்ற முயன்றது. தாங்கள் தரப்பை சேர்ந்தவரின் நிலத்திலேயே அலுவலகம் அமைந்துள்ளதாகவும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை பார்த்து வருவதாகவும் கூறியது.
எனவே இபிஎஸ் தரப்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பசுபதி சாவியை ஒப்படைக்காததால் மேலும் ஒரு பூட்டை பூட்டியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகச் சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தவெகவுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் இபிஎஸ் – சிவிசஎஸ் இடையே பிளவு ஏற்பட்டதால், அலுவலகம் யாருக்கு என்பதில் மோதல் நிலவி வந்தது.
இந்நிலையில், சி.வி.சண்முகம் தரப்பினர் சாவியை இபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.


