மே மாத யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு புதிய உச்சமாக ரூ.30 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் இதுவரை இல்லாத வகையில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை டிஜிட்டல் கட்டண முறைகள் அன்றாட வணிகத்தோடு வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதையே இந்த அசுர வளர்ச்சி காட்டுவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) தரவுகளின்படி, மே மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு ஏப்ரல் மாதத்தை விட 3% அதிகரித்து ₹29.90 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் […]
தம்பி விஜய் எப்போ முதல்வரா பொறுப்பேற்க போறீங்க? – அதிமுக சாடல்

திருச்சி நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதிமுக பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்து முதல்வர் விஜய் பேசிய நிலையில், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், எந்த உழைப்பும் கொடுக்காமல், எந்த போராட்டத்தையும் முன்னெடுக்காமல் தேர்தல் களத்தை சந்தித்து அதிகாரத்துக்கு வந்த தம்பி விஜய், தற்போது வானத்திற்கும் […]
தவெக நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால், தவெக நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை தூத்துக்குடியில் வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்று, ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பெண்ணை […]
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு – திருச்சி சென்றடைந்தார் முதல்வர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையம் சென்ற அவருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புத்தகம், நினைவுப்பரிசு மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு […]
திமுக ஆட்சியின் தாயுமானவர் திட்டம் தொடரும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூ.கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த போது, திமுகவின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடரும்படி கேட்டுக் கொண்டார். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் […]
பகல் 12 – 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த நிலையிலும், மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றும் கூட 14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், […]
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு – இதுவரை 2.81 லட்சம் பேர் பதிவு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 2 (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கால அவகாசம் வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2 லட்சத்து 81 ஆயிரத்து 502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கட்டணம் செலுத்திய 2 லட்சத்து 17 ஆயிரத்து 627 மாணவர்களில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 53 […]
நன்றி தெரிவிப்பு கூட்டத்துக்காக இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், பெரம்பூரில் 1,20,365 வாக்குகளும் , திருச்சி கிழக்கில் 91,381 வாக்குகளும் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார். திருச்சி கிழக்கு உட்பட மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 6ல் தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், திருச்சி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, […]
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையல் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் […]
தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், நாளை முதல் வெயில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் எனப்படும் உக்கிர வெயில் காலம் முடிந்த நிலையிலும், தமிழ்நாட்டில் வெயில் தொடர்ந்து சுட்டெரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சி, திருத்தணி, சென்னை விமான நிலையத்தில் தலா 104 டிகிரி வெப்பம் வாட்டி வதைத்தது. கரூர் பரமத்தியில் 103 டிகிரியும், […]