நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
முப்படைகளின் தலைமை தளபதியாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்த அனில் சவுகான் நேற்று ஓய்வு பெற்றார்.
இவரது பதவிக்காலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருந்த நிலையில், ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டார். ஜெனரல் அனில் சவுகான் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து நாட்டின் புதிய தலைமை தளபதியாக ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்று கொண்டார்.
முப்படைகளின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, ராணுவத்தில் பல ஆண்டுகள் களத்தில் நின்று வேலை பார்த்து மிக பெரிய அனுபவம் வாய்ந்தவர்.
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றிகரமாகப் பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்ரமணி, கடந்த1985ம் ஆண்டு கர்வால் ரைபிள்ஸ் படையில் தனது பணியை தொடங்கினார்.
புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்ற பின் ராஜா சுப்பிரமணி கூறுகையில், ‘‘நாட்டின் ஆயுதப்படைகளில் உள்நாட்டு ஆயுதங்களின் மேம்பாடு, சேர்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு விரைவுபடுத்தப்படும்’’ என்றார்.
இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணியை புதிய முப்படைகளின் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) நியமித்துள்ளது. இவர் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


