உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

புறநகர் ஏசி மின்சார ரயிலில் மே மாதம் 1.30 லட்சம் பேர் பயணம் – தெற்கு ரயில்வே

புறநகர் ஏசி மின்சார ரயிலில் மே மாதம் 1.30 லட்சம் பேர் பயணம் – தெற்கு ரயில்வே

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

இதுவரை இல்லாத அளவுக்கு புறநகர் ஏசி ரயிலில் மே மாதம் 1.30 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சென்னை கோட்டத்தால் இயக்கப்படும் ஏசி புறநகர் ரயில் சேவைகளுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்த ஏசி ரயில்கள் வழங்கும் வசதி மற்றும் பயணிகளுக்கேற்ற சூழல் காரணமாக, புறநகர் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெருமளவில் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

தற்போது, சென்னையின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான புறநகர் பாதையில் மொத்தம் 10 ஏசி ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்குவதுடன், தடையற்ற தரைவழிப் போக்குவரத்து இணைப்பையும் உறுதிபடுத்துகின்றன.

நடப்பு 2026ம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்தமாக 4,36,462 பயணிகள் ஏசி ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மாதவாரியான பயணிகளின் எண்ணிக்கை முறையே ஜனவரியில் 69,454, பிப்ரவரியில் 66,138, மார்ச் மாதம் 89,176, ஏப்ரலில் 87,431 ஆக இருந்த நிலையில் மே மாதம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 263 ஆக பதிவாகியுள்ளது.

இந்த தரவுகள், குறிப்பாக கோடை காலத்தில் சென்னை மக்களிடையே ஏசி ரயில் சேவைகள் பெற்றுள்ள பெரும் வரவேற்பை தெளிவாக காட்டுகின்றன.

இந்த ஏசி ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்தே இதுவரை இல்லாத அளவாக கடந்த மே 2026ல் தான் மிக உயர்ந்தபட்ச பதிவாக 1,24,263 பயணிகள் பயணித்துள்ளனர்.

இதன் மூலம், இச்சேவை வரலாற்றில் புதிய மைல்கல்லாக முதன்முறையாக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பயணிகளின் எண்ணிக்கையை மிக எளிதாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் மட்டும் 36,832 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர்.

இது ஏறக்குறைய 42% வளர்ச்சி அடைந்திருப்பதைக் காட்டுவதுடன் கடுமையான கோடை வெயிலின் போது ஏசி ரயில்களையே மக்கள் பெரிதும் தெரிவு செய்திருப்படை உறுதிப்படுத்துகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில், தங்களின் தினசரி பயணத்தை எவ்வித மன உளைச்சலும் இன்றி, குளிர்ச்சியாகவும், வேகமாகவும் அதே நேரம் பாதுகாப்பாகவும் நிறைவு செய்ய புறநகர் ரயில்வேயை பயணிகள் பெருமளவில் நாடியிருப்பது தெளிவாகிறது.

இது நவீன மற்றும் பயணியர்-மையப் புறநகர் ரயில் சேவைகளை வழங்குவதில் சென்னை கோட்டத்தின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். பொதுமக்களின் இந்த அமோக வரவேற்பு, ஏசி ரயில்களின் முக்கியப் பங்களிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.