தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்தும்படி தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை விவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தனியார் கல்வி நிர்வாகம் கல்வி கட்டண விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, கல்வி நிறுவனம் கல்வி கட்டணத்தை காட்சிப்படுத்த உறுதி செய்யும் வகையில் புகைப்படம் எடுத்து அந்த அந்த மாவட்ட தனியார் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்புமாறும் மாவட்ட வாரியாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தபட்டு உள்ளதை மாவட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி கட்டணத்தை அனைவருக்கும் தெரியும்படி விளம்பரப்படுத்தவும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவிலும் வகுப்பு வாரியாக கல்வி கட்டணத்தை அச்சடித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


