உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஓராண்டில் மோடி பிரதமராக இருக்க மாட்டார் – ராகுல் கணிப்பு

ஓராண்டில் மோடி பிரதமராக இருக்க மாட்டார் – ராகுல் கணிப்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

டெல்லி இந்திரா பவனில், காங்கிரஸ் கட்சியின் பழங்குடியினர் பிரிவான ஆதிவாசி காங்கிரஸ் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஒருபுறம் பொருளாதார சுனாமி ஒன்று நெருங்கிக் மக்கள் தங்கள் வாழ்நாளில் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க இருப்பதாகவும் இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

மறுபுறம், மக்களின் அழுத்தம் காரணமாக அரசு நிர்வாக அமைப்பிற்குள் கிளர்ச்சி வெடித்திருப்பதால் ஒருகாலத்தில் மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த அமைப்பு தற்போது சரிந்து வருவதாகவும் தற்போது அந்த அமைப்பு மோடி குறித்தும், அவரது அமைச்சரவை சகாக்கள் குறித்தும் தனக்கு தகவல்கள் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர், உளவுத்துறை தலைவர், மூத்த நீதித்துறை உறுப்பினர்கள் என பலரும் தகவல்கள் அளித்து வருவதாகவும் இந்நிலை நீடித்தால் தனது கணிப்புப்படி, இன்னும் ஓராண்டு காலத்தில் மோடி பிரதமராக இருக்க மாட்டார் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை மக்கள் அறிந்து கொண்டால், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கோபம் வெடித்து சிதறினால், நாளை என்ன நடக்குமோ என தேர்தல் ஆணையமும் கவலைப்படத் தொடங்கி உள்ளதாகவும் மோடியின் அமைப்பு ஆட்டம் காணத் தொடங்கி விட்டதாகவும் ராகுல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.