உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு – சித்தராமையா மகன் உள்பட 12 அமைச்சர்களும் பதவியேற்பு

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு – சித்தராமையா மகன் உள்பட 12 அமைச்சர்களும் பதவியேற்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கர்நாடக மாநிலத்தின் 25வது முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார். துணை முதல்வராக டாக்டர் ஜி.பரமேஸ்வரும், சித்தராமையா மகன் உள்பட 12 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

கர்நாடகாவில் சித்தராமையா சுமூகமான ஆட்சி மாற்றம் ஏற்பட வசதியாக முதல்வர் பதவியை கடந்த 28ம் தேதி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்ய கடந்த 30ம் தேதி பெங்களூரு விதானசவுதாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக டி.கே.சிவகுமார் பெயரை, சித்தராமையா முன் மொழிந்தார். அதை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து ஜூன் 3ம் தேதி ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரை சந்தித்து டி.கே.சிவக்குமார் உரிமை கோரினார். இதனை ஏற்று கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்கும்படி டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, பெங்களூரு மக்கள் பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நேற்று மாலை 4.05 மணிக்கு புதிய முதல்வர் பதவியேற்பு விழா தொடங்கியது.

முதலில் வந்தேமாதரம் பாடலும், பின் தேசியகீதமும் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநில மொழிப் பாடல் பாடப்பட்டது.

விழா மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, கேரள மாநில முதல்வர் சதிசன், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோருக்கு டி.கே.சிவக்குமார் பொன்னாடை அணிவித்து, பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

அதன் பின், டி.கே.சிவக்குமாரின் குருவான கங்காதரய்யா அஜ்ஜனாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதை தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு மாநில முதல்வராக டி.கே.சிவக்குமார், வீரகங்காதரய்யா அஜ்ஜய்யானாவின் பேரில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது விழாவில் பங்கேற்ற அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

புதிய முதல்வருக்கு ஆளுநர் கெலாட் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். டி.கே.சிவக்குமாருக்கு மேடையில் இருந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து துணை முதல்வராக டாக்டர் ஜி.பரமேஸ்வர் பதவியேற்றார். பின்னர் கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, கிருஷ்ண பைரேகவுடா, பிரியாங்க் கார்கே , யு.டி.காதர், ஈஸ்வர்கண்ட்ரே, முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் டாக்டர் யதீந்தீரா, பைரதி சுரேஷ், சரணபிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

அவர்களுக்கும் ஆளுநர் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய அரசு பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் எம்.வீரப்ப மொய்லி, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதீன், திரையுலக பிரபலகங்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், 40க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், ஜோதிடர்கள், வாஸ்து நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து டி.கே.சிவகுமார், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பினார். புதிய தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற டி.கே.சிவகுமார் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் கட்சி தலைவராக இருந்து கட்சியை சிறப்பாக வழிநடத்தினார்.

மாநிலத்தில் டி.கே.சிவகுமார் தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சியில் சபாநாயகராக இருந்த யு.டி.காதர், அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் ருத்ரப்பா லாமணியிடம் வழங்கினார். புதிய அரசில் மூத்த சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கு சபாநாயகர் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டி.கே.சிவகுமாரை தொலைபேசியில் தொடர்புகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதே போல் கர்நாடக புதிய முதல்வருக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

அதே போல், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, எச்.டி.குமாரசாமியும் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.