மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
மாநிலத்தின் முதல்வராக கடந்த 9ம் தேதி சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார்.
இதனிடையே, மே.வங்கத்தில் சுமார் 400 தனித்துவ உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு ரூ.5 விலையில் மீன்சாதம் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகே மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது எனவும் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்கும் அன்னபூர்ணா திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மே 27 முதல் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்தார். அத்துடன், தனியாக ‘ஆயுஷ்’ துறையை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மே.வங்கத்தில் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்படி, முதல்கட்டமாக 28 லட்சத்து 25 ஆயிரத்து 769 பயனாளிகளுக்கு ரூ.3,000 உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மேலும், புதிய விண்ணப்பங்கள் தொடர்ந்து பெறப்பட்டு, அடுத்த 3 மாதங்களில் சரி பார்க்கப்பட்டபின் பயனாளிகளின் கணக்குகளுக்கு ரூ.3,000 வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


