உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதன்முதலாக இன்று நடைபெறுகிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மாதம் 10ம் தேதி பதவியேற்றது. அதைத் தொடர்ந்து 21ம் தேதி 23 அமைச்சர்களும், 22ம் தேதி இரு அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் எனத் தகவல் வெளியானது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி, உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகின. மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது.

மேற்கூறிய இந்த விவகாரங்கள் குறித்தும், இன்னும் 2 வாரங்களில் பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் அதன் தயாரிப்பு பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.