‘மக்கள் மேடை’ புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகள் செய்து முடித்த பிறகு உடல் நலம் காரணமாக அரசியல் முடிவை கைவிட்டார். அதே நேரம், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலமாக அவர் ஒரு புதிய இயக்கத்தை தொடங்க முடிவு செய்திருந்தார். கடந்த டிசம்பர் 21ம் தேதி சென்னை கிண்டியில் லதா ரஜினிகாந்த் தலைமையில் தயா பவுண்டேஷன் அமைப்பின் முதன்மை […]
மாறுவோம் மாற்றுவோம் கொள்கையுடன் புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை

தமிழகத்தில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற கொள்கையோடு ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, அதனை கட்சியாக மாற்றி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது பதவி ராஜினாமா கடிதத்தை டெல்லியில், பாஜ தலைவர்களை சந்தித்து அளித்தார். இந்நிலையில், இன்று காலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் மற்றும் தலைமையக பொறுப்பாளர் அருண் சிங் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து […]
ஜூன் 18 சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் – சபாநாயகர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முழுமையான கூட்டத்தொடராகும். 17வது புதிய சட்டப்பேரவையின் இந்த முதல் கூட்டத்தொடர் வழக்கம் போல், ஆளுநர் அர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அடுத்த 2 நாட்களுக்கு […]
காயிதே மில்லத் 131வது பிறந்தநாளில் அவர் புகழைப் போற்றுகிறேன் – மு.க.ஸ்டாலின்

சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் 131வது பிறந்தநாள் திருவல்லிக்கேணி நினைவிடத்தில் இன்று கொண்டாடப்பட்டது. காயிதே மில்லத்தின் 131வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், மலர் வளையம் வைத்து வணங்கினர். இதன்போது திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131வது பிறந்தநாளில் அவரது […]
அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு

கட்சியில் இருந்து விலகும் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் தமிழக பாஜகவின் தற்போதைய நிலை மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்தத் […]
மேகதாது விவகாரம் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் – கர்நாடக முதல்வர்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது பகுதியில் சுமார் ரூ.9,000 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததோடு, மத்திய […]
இந்தியாவுக்கு கூடுதல் எரிபொருள் வினியோகம் – வெனிசுலா இடைக்கால அதிபர் உறுதி

வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோவை அமெரிக்க அரசு கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபராக இருக்கும் டெல்சி ரொட்ரிகஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபரானார். இந்நிலையில், இடைக்கால அதிபர் டெல்சி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் போது எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து […]
விஜய் அண்ணாவுக்கு எதுவும் தெரியாது, ஆனால் மக்களை ஏமாற்ற தெரியும் – அதிமுக ஆர்.பி.உதயகுமார்

விஜய் அண்ணாவுக்கு எதுவும் தெரியாது, ஆனால் மக்களை ஏமாற்ற தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், தற்போது தமிழகத்தில் நடந்து வரும் வன்முறைகள் பற்றியும் அவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் தவெக தலைமையையும் கடுமையாக சாடியுள்ளார். குற்றங்களை தடுக்க தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது குற்றங்கள் தான் மாநிலம் முழுவதும் புயல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சம்பவங்களை மயிலிறகால் வீசி […]
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.2,500 உதவித்தொகைக்கு கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. இதைத் தொடர்ந்து, மே 13ம் தேதி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரங்கசாமி 5வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ரங்கசாமி தரப்பில் இருந்து […]
ஆசிரியர்கள் கருத்தை கேட்காமல் சிபிஎஸ்இ ஓஎஸ்எம் முறை அறிமுகம் – பெற்றோர் சங்கம் குற்றச்சாட்டு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 13ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இதில் தேசிய அளவில் 85.20% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனிடையே, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் டிஜிட்டல் வழி மதிப்பீட்டு முறையில் (ஓஎஸ்எம்) திருத்தப்பட்டு வெளியான முடிவுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி பெற்றோர் சங்க தலைவர் அப்ரஜிதா கவுதம் நேற்று அளித்த பேட்டியில், ஓஎஸ்எம் டிஜிட்டல் […]